About Us

ப்பான் தமிழ் சங்கம்,முற்றிலும் தமிழுக்காக, தமிழைக் காப்பதற்காக அதன் வளர்ச்சிக்காக அதனை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ்ஆர்வலர்களால் ஒன்றுகூடி உருவாக்கப்பட்டுள்ளது. இது சப்பான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்ச்சங்கமாகும்.

மது அடுத்த தலைமுறையான மாணவர்களிடையே தலைமைப்பண்புகள்,தனித்திறமைகளை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் தாய்மொழிப்பற்றை வளர்ப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.மேலும் தமிழ்மொழியின் வளர்ச்சியைக்கருத்தில் கொண்டு தமிழகம் மற்றும் உலகளவிலுள்ள தமிழ் அறிஞர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதுடன் தமிழாய்வு, தமிழ் அறிவியலாய்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதும் மற்றும் சப்பானில் வாழும் நம் தமிழ் உறவுகள் தங்கள் சமூக வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், ஜப்பானிய-தமிழ் அகராதி உருவாக்குதல் ஆகியனவற்றை மேற்கொள்கிறோம். பல சீரிய செயல்திட்டங்களைத்தீட்டி தமிழுக்கு என்றும் வெற்றி தேடித்தந்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை அடைய நாம் எடுத்துக்கொண்ட முழக்கம்தான் "வென்றாகவேண்டும் தமிழ்!.ஒன்றாகவேண்டும் தமிழர்கள்!!